Today News செய்திகள் 25.09.2020

Singer S.P. Balasubramaniyam



பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

 - மருத்துவமனை நிர்வாகம்.

 

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை.

 

எஸ்.பி.பி. மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

 

பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிப்பு.

 


போலீசார் கட்டுப்பாட்டில் எம்ஜிஎம் மருத்துவமனை.

 

எஸ்பிபி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 

“துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ சில சூழ்நிலைகளிலோ பேச  வார்த்தை வராது”

 

- இயக்குநர் பாரதிராஜா


Today News செய்திகள் 25.09.2020 1:30PM


ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

சிகிச்சைக்கு ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

 

அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார்.

 

வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது.

 

இதனால் திரையுலகினர், ரசிகர்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

 

எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

 

இந்நிலையில் திடீரென்று நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

 

இன்று அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டு உள்ளது அவரது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM