Today News செய்திகள் 27.09.2020

 செய்திகள் 27.09.2020

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர் மட்டம் 46 அடியாக உள்ளது. நீர் இருப்பு 44 அடியாக உள்ளது. கோமுகி அணைக்கு நீர்வரத்து 30 கன அடி; அணையில் இருந்து 30 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

-


மேற்கு வங்கத்தில் - அக்டோபர் 1ம் தேதி முதல் தியேட்டர் திறப்பு. 

-

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்.


 
இவர் வெளியுறவு துறை பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.

 -

நியாய விலைக்கடைகளில் அக்டோபர் மாதத்துக்கான பொருள்கள் வாங்க நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்.

-

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா.

சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை.

-

 கொரோனா பரவலால் மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.

மே 5 ஆம் தேதி மூடப்பட்ட நிலையில் சுமார் 6 மாத இடைவெளிக்கு பிறகு கோயம்பேடு சந்தை இன்று திறக்கப்படுகிறது.

-

JEE Advanced தேர்வு தொடங்கியது!

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பகளுக்கு இந்திய அளவில் நடத்தப்படும் JEE Advanced தேர்வு தொடங்கியது!

நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் JEE Advanced தேர்வை எழுதுகின்றனர்!

-

 திருச்சி இனாம்குளத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல...

தமிழ் இனத்தின் தலைவர்- ஸ்டாலின்

பெரியாரை அவமதிப்பதாக நினைப்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள் - ஸ்டாலின்

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால், மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்- ஸ்டாலின்.

திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்த செயலுக்கு கடும் கண்டங்கள் - .பி.எஸ்.

சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - .பி.எஸ்.

-


Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM