Today News செய்திகள் 10.10.2020 | NPM
Today News 10.10.2020 | NPM
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கரையான்சாவடி கிளை சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் சிறைக்கு சென்ற இளம்பெண் கைது.
-------
சென்னையில் 9 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
-------
சென்னை வடக்கு மண்டலத்தில் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த 98 காவலர்களுக்கு வேறு காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
-------
உலக மனநல தினம்
மனநலப் பிரச்சினைகள் குறித்த உலக மக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அக்டோபர் 10-ம் நாளை உலக மனநல நாளாக ஐநா சபையின் துணை அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) 1992 முதல் அனுசரித்துவருகிறது
நீங்கள் நம்பும் ஒருவரிடம் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசுங்கள்..
பேசினால் தீராத விஷயம் என்று இந்த உலகில் எதுவுமில்லை...
-------
ஓபிஎஸ் இன்று திருப்பதி தரிசனம்.
-------
மதுரையில் இடைவிடாத கனமழை. இரண்டு மணி நேரமாகக் கொட்டி தீர்த்ததில் வெள்ளக்காடானது, மதுரை.
-------
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார்.
-------
ம.தி.மு.க, தனி சின்னத்தில் தான் போட்டியிடும்- செய்தியாளர்களிடம் தலைவர் வைகோ அறிவிப்பு.
-------
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
-------
மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வு;
தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை.
-------
Comments
Post a Comment