Today News செய்திகள் 15.10.2020 | NPM
Today News 15.10.2020 | NPM
தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்.
முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க முடிவு - ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்.
-----
அக்.19 முதல் சென்னையிலிருந்து மதுரைக்கு வாரம் 3 நாட்களும், கோவைக்கு வாரம் 6 நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு.
பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 15ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
-----
"தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை.
பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்!".
- அமைச்சர் செங்கோட்டையன்.
-----
காங்கிரஸ் கட்சியை ‘மூளை வளர்ச்சியில்லாத கட்சி’ என விமர்சித்ததற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல்துறையில் புகாரளித்த நிலையில், தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார் குஷ்பு.
-----
மத்திய அரசை திமுக எதிர்ப்பதால் 2ஜி வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப் படுவதால் எங்களுக்கு கவலையில்லை.
- திமுக எம்.பி கனிமொழி
-----
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபத அப்துல் கலாமின் 89- வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் வண்ண விளக்கில் ஜோலிக்கும் அவரது மணிமண்டபம்.
-----
போலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் மீது போலீசில் புகார்
கிருஷ்ணகிரி: போலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு கூட படிக்காமல் ஆசிரியராக இருந்த ராஜேந்திரன் மீது மாவட்ட கல்வி அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலி சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்ததாக புகார் வந்ததால் ஆவணங்கள் சரிபார்த்தபோது ராஜேந்திரன் சிக்கினார்.
-----
3 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவை அறிவிக்கும் சிப் - தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்டுபிடிப்பு
-----
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி.
துலாம் மாதத்தின் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நாளை மாலையில் தொடங்கி நடைபெற உள்ளன.
தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது.
சபரிமலைக்கு செல்லும் முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
-----
பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமல்.
கொரோனா ஊரடங்கில் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க, மத்திய அரசு வழங்கிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு கடந்த, 1ம் தேதி அறிவித்தது.
-----
சிதம்பரம் அருகே
சி .முட்லூர் தில்லைநாயகபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் வயது 28 என்பவர் மின்கம்பத்தில் கை கால்கள் கழுத்து ஆகியவை துணியால் இறுக்கி கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிதம்பரம் விருதாச்சலம் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர்கள் கைது சிதம்பரம் நகர போலீசார் அதிரடி நடவடிக்கை
-----
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை உயர்ந்த நிலையில் விற்பனை மந்தமானதால் மீண்டும் விலை குறைந்து காணப்படுகிறது.
-----
டெல்லியில் இன்று முதல் அவசர தேவைகளை தவிர பிற பயன்பாட்டுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்த தடை.
காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பெரிய கட்டுமான பணிகளுக்கும் தடை- டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு
பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம்.
-----
Bicycle Sale Increase
இந்தியாவில் சைக்கிள் விற்பனை கடந்த 5 மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளதாக அவற்றின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-----
ஆந்திரா-தெலுங்கானாவில் கொட்டித் தீர்த்த மழைக்கு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு உதவும் என பிரதமர் மோடி உறுதி
-----
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி வெற்றி... புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற்றம்
-----
World Count_Covid19
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் : 3,87,34,694
குணமடைந்தவர்கள் : 2,91,22,897
உயிரிழந்தவர்கள் : 10,96,828
-----
உலக கைகழுவும் தினம்
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதியை உலக கைகழுவும் நாளாக கடைபிடிக்கிறது. இந்நாளில் கைகழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
-----
கலாமின் பங்களிப்பை நாடு என்றும் மறக்காது:
நாட்டின் வளர்ச்சிக்கு அப்துல்கலாம் அளித்த பங்களிப்பை நாடு என்றும் மறக்காது
லட்சக்கணக்கான மக்களுக்கு கலாமின் வாழ்க்கை ஊக்கமளிப்பதாக உள்ளது
- கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்.
-----
ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை செலுத்தினார் ரஜினி.
நீதிமன்றத்தில் சொத்து வரி தொடர்பாக வழக்கு
தொடர்ந்து வாபஸ் பெற்ற நிலையில் வரி
செலுத்தினார்.
-----
அடியாட்கள் மூலம் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை - கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
-----
அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-----
Comments
Post a Comment