Today News செய்திகள் 20.10.2020 | NPM
Today News 20.10.2020 | NPM
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை: 7 மாதத்தில் பிரதமரின் 7வது உரை.
கொரோனவை அடி வேரோடு அழிக்கும் வரை இந்தியர்களின் போராட்டம் ஓயாது - பிரதமர் மோடி.
பல தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளன.
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சிக்கு உரியது.
அதே நேரத்தில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட வேண்டும்.
-----
ஸ்ரீதர் வேம்பு! உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”.
தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) ! அமெரிக்க சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்த மாபெரும் நிறுவனத்தை, தன் சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்த தமிழன்.
-----
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,94,030 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 857 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,91,754 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 50 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 10,741 ஆக உயர்வு.
-----
முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று படத்திலிருந்து விலகினார் விஜய்சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து -சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்.
தோனி மற்றும் விஜய் சேதுபதி மீது மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்- தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
-----
சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும்.
பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவதையொட்டி ராகுல் காந்தி ட்வீட்.
-----
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை:
கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
-----
காரீஃப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
-----
நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் (YouTube Channel) தொடங்க உள்ளதாக தகவல்.
-----
தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்.எல்.ஏ. தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்துக்கொள்ளலாம்.
வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
-----
பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து தமிழகத்திற்கு (சென்னை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி) ஆறு இரட்டை பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்.
தசரா (நவராத்திரி) மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விழாக்கால சிறப்பு தொடரிகளை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-----
தெலங்கானா வுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.15 கோடி வழங்கப்படும் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
தெலங்கானாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 கோடி அளித்ததற்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்தார்.
-----
மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:
அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் - தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
-----
கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கவுதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜக - வில் இணைந்துள்ளனர்
-----
Comments
Post a Comment