Today News செய்திகள் 23.10.2020 | NPM

 Today News 23.10.2020 | NPM

பீகார் சட்டமன்ற தேர்தல்:  பிரசாரத்தை தொடங்கிய பிரதமர்.

கொரோனாவிற்கு எதிராக பீகார் தைரியமாக போராடி வருகிறது.


பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் - பிரதமர்.

-----

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு. பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ - பல்வேறு தரப்பு புகாரின் பேரில் நடவடிக்கை.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு.

-----

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில், ‘லஞ்சம் தலைவிரித்தாடும் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம்.  


கட்டுப்படுத்துவது யார்?’ சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

-----

அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதன்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

-----

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது எதிர்த்து இலங்கை அரசு இங்கிலாந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று இலங்கை தெரிவித்துள்ளது

-----

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்வு.

-----

மின்வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

www.tangedco.org, tantransco.org, tnebltd.org ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

புதிய இணையதள வசதிகளை 28ம் தேதி முதல் மக்கள் பயன்படுத்தலாம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

-----

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி - முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

-----

கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி: டெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை. 1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தவர்.

-----

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி.

-----

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ரூ.119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது.

-----

விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM