Today News செய்திகள் 30.10.2020 | NPM

 Today News 30.10.2020 | NPM


துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உருவான சுனாமி:

ஏகன் நகருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு.

ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் - இடிந்து விழுந்த கட்டடங்கள்.

கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பல்கேரியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம்.

-----

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 723 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,99,173 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 38 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,091 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,924 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,87,388 பேர் குணமடைந்துள்ளனர்.

-----

7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

-----

பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல்.

இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 20,307 பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது

நேற்று ஒரே நாள் பத்திரப்பதிவில் ரூ.123.35 கோடி  வருவாய் கிடைத்துள்ளது

-----

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது.

-----

PUBG GAME:

இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.

-----

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,872 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,734 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஒரு கிராம் வெள்ளயின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.65.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

-----

தேவர் ஜெயந்தி : 

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை.

துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை.

-----

இன்று உலக சிக்கன நாள்:

எல்லாவற்றிலும் சிக்கனமாக இருங்கள்.



உங்களின் சிக்கனம். உங்கள் சந்ததிகளை நலமாக வாழ வைப்பதோடு, உலகத்தின் வாழ்நாளையும் அதிகரிக்கும்.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM