Today News செய்திகள் 02.11.2020 | NPM
Today News 02.11.2020 | NPM
திருப்பதி மலையப்ப சுவாமி கோவில்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி பூதேவியருடன் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
-----
வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி விதிப்பு தொகை.
வரும் 5ந்தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்.
-----
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் திட்டத்தை அவரது ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனை அடுத்து அவரது வீட்டிற்கு அஞ்சல் அட்டைகள் வந்து குவிந்து கொண்டிருப்பதா கவும் அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் செய்திகள்.
-----
தமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 2,45,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்!
-----
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு. சி.எஸ்.கே.வின் கடைசி வெற்றியுடன் கண்ணீருடன் விடை பெற்றதாகத் தகவல்.
-----
2.91 லட்சம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு.
-----
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 671 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,01,195 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 31 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,183 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,940 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,98,820 பேர் குணமடைந்துள்ளனர்.
-----
ஆப்கானின் காபூல் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள், மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலி.
ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் மீது கடந்த ஒரு மாதத்தில் நடக்கும் 2வது தாக்குதல் இது.
-----
புதுக்கோட்டையில் தி.மு.க அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின்.
-----
சேலம்: ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-----
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 157 புள்ளிகள் சரிந்து 39,457 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 11,595 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.
-----
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
-----
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வதற்காக பிரச்சார வாகனம் ஒன்று தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
-----
VPF கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவிப்பு.
-----
Comments
Post a Comment