Today News செய்திகள் 03.11.2020 | NPM

 Today News 03.11.2020 | NPM


வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.



2021 ஜனவரி இறுதி வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்ற கருத்தை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை - மு.க.ஸ்டாலின்.

-----

கோவை: 

அதிகாலை முதல் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் 32 ரவுடிகள் பிடிபட்டனர். கட்ட பஞ்சாயத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

-----

திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்: தேவஸ்தானம் தகவல்

-----

ஆன்லைன் ரம்மி-யை தடை செய்வது குறித்து 10 நாளில் உரிய முடிவு எடுக்கப்படும் - தமிழக அரசு தகவல்.

-----

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் 10ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

-----

கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.

-----

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு: டிரம்ப்- ஜோ பைடன் இடையே கடும் போட்டி.

-----

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.

-----

சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை - கமல்ஹாசன்

மக்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி இருக்கும்.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM