Today News செய்திகள் 13.11.2020 | NPM

Today News 13.11.2020 | NPM

 

தமிழகம் - கர்நாடகா இடையே வரும் 16ஆம் தேதிக்கு பிறகும் பேருந்துகள் இயக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.



தீபாவளியையொட்டி, வரும் 16ஆம் தேதி வரை பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து இயங்க உத்தரவு.

-----

இந்திய-பாக். எல்லை மோதலில் 6 வீரர்கள் & 4 பொது மக்கள் என இந்திய தரப்பில் மொத்தம் 10 பேர் உயிரிழப்பு.

16+ பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

"போர் போன்ற சூழல்" எல்லையில் நிலவுவதால் இந்திய ராணுவம் உஷார் நிலை.

-----

தமிழகத்தில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,54,460 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 512 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,07,686 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 14 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,454 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,572 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,25,258 பேர் குணமடைந்துள்ளனர்.

-----

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு:

சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு.

உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியை வைத்து சுட்டதாக விசாரணையில் தகவல்.

சென்னையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.

-----

தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை - மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

வரும் 17-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒருநாளைக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி.

-----

குஜராத் ஜாம்நகர், ராஜஸ்தானின் ஜெயப்பூரில் ஆயுர்வேத மையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாரம்பரிய மருந்துகள் குறித்த ஆராய்ச்சியை வலுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் குறித்த WHO உலகளாவிய மையத்தை நிறுவுகிறது.

-----

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆரணி, கண்ணமங்கலம், வண்ணாங்குளம், ஒண்ணுபுரம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை.

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, சேலம். நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

-----

திருநெல்வேலி தீபாவளிப்பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பலகாரங்கள் தயாரிப்பு வெள்ளிக்கிழமை தீவிரமாக நடைபெற்றது. பேக்கரிகளில் புத்தம்புது இனிப்பு வகைகள் ஏராளமாக வந்தாலும், தீபாவளி பலகாரங்களில் கைச்சுற்று முறுக்குகள் தனித்தன்மை குறையாமல் விற்பனையாகின. ஆனால், அதனைத்தயாரிக்கும் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

-----

தீபாவளியையொட்டி பூக்களின் விலை கடுமையாயக உயர்ந்துள்ளது.

-----

மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கான தொடக்கமாக தீபாவளி அமையட்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். கொரோனாவால் சந்தித்த துயரங்களை மறந்து எதிர்காலத்தை செம்மையாக அமைத்திட உழைப்போம் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

-----

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,304க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,788 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கு விற்பனை ஆகிறது.

-----

கரோனா தொற்று உறுதியானதாக பிரபல நடிகர் சிரஞ்சீவி சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார். எனினும் மூன்று விதமான பரிசோதனைகளின் முடிவில் தனக்கு தொற்று இல்லையென தற்போது அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

-----

குந்தரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



தீபாவளியையொட்டி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

-----

ஓசூர் மாநகராட்சி ஆணையர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் திண்டுக்கல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு திரு செந்தில் முருகன் ஓசூர் மாநகராட்சி ஆணையராக நியமனம்.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM