Union Budget Updates 2021 இன்றைய பட்ஜெட் விபரம் | NPM

 Union Budget Highlighs 2021 இன்றைய பட்ஜெட் விபரம் | NPM




சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 277 கி.மீ தூர 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பனி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----

உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும். மேலும் தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

-----

மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு மாற்றமின்றி நீடிக்கிறது

-----

பெட்ரோல் மீது லிட்டருக்கு ₹2 ம், டீசல் மீது லிட்டருக்கு ₹4ம் வேளாண் வரி வதிப்பு!

-----

மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை - நிர்மலா சீத்தாராமன்.

-----

ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை.

-----

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு.

-----

வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும்.

-----

கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம்.

-----

கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு.

-----

2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது.

-----

5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு.

-----

இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும்.

-----

பி.எஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை.

-----

சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார். கடினமான சூழலில் மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார் என கூறினார். அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

-----

மகிழ்ச்சியையும், கவலைகளையும் தரும் மத்திய பட்ஜெட்! - டிடிவி தினகரன்

-----

மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசின் பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம் கூறினார். நிதிப் பற்றாக்குறையை குறைக்க நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஜிஎஸ்டி வரியில் எந்த குறைப்பும் இல்லை எனவும் கூறினார்.

-----

டிஜிட்டலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு பாரிவேந்தர் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். முனைப்பான திட்டங்களை மக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM