சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Assembly Elections News 2021 | NPM

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.

லால்குடி, பட்டுக்கோட்டை, திரு.வி.க.நகர், கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தூத்துக்குடி.

இதில் அதிமுக லால்குடி தொகுதிக்கு ராஜாராம் என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில் அந்த தொகுதி தற்போது த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

த.மா.கா. 6 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும். - ஜி.கே.வாசன்.

*****

திமுகவின் வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாக நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.



தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகவிருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நிடித்து வருவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், திமுக வேட்பாளர்களின் பட்டியல் நாளை ஒரே கட்டமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள்(சனிக்கிழமை) வெளியாகவுள்ளது.

*****

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

 

1.மதுராந்தகம் (தனி) - மல்லை சத்யா

2. சாத்தூர் - ரகுராம்

3. மதுரை தெற்கு - பூதூர் பூமிநாதன்.

4. அரியலூர் - சின்னப்பா

5. வாசுதேவ நல்லூர் - சதன் திருமலைகுமார்

6. பல்லடம் - முத்துரத்தினம்.

*****

திமுக கூட்டணியில விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

1.வானூர் (தனி)

2.செய்யூர் (தனி)

3.காட்டுமன்னார் கோயில் (தனி)

4.அரக்கோணம் (தனி)

5.நாகை.

6.திருப்போரூர்

*****

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

*****

டிடிவி தினகரன் முன்னிலையில் கர்நாடக இசை பாடகரும், பிரபல திரைப்பட நடிகருமான மோகன் வைத்தியா தன்னை அமமுகழகத்தில் இணைத்துக் கொண்டார்.

*****

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு:

1.கடையநல்லூர் - முகமது அபு பக்கர்.

2.வாணியம்பாடி - முகமது நயீம்.

3.சிதம்பரம் - அப்துல் ரகுமான் போட்டி

*****

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையழுத்தானது.

காங்கிரஸ் – 15 & திமுக -13 இடங்களிலும் போட்டி.

*****

அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு.

திருச்சுழியில் மூவேந்தர் முன்னணி கழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டி.

*****

தேமுதிக தனித்து களம் காண தயாராகி வருவதாக தகவல்

அ.ம.மு.க-வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு.

*****

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எம். சுகுமார் அவர்களை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல்.

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM