Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. நீதிமன்றத்திலிருந்து அறிக்கை வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும். உச்சநீதிமன்ற உத்தரவில் என்ன சொல்லப்பட்டதோ அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் 4 மாதங்களுக்கு மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ***** ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி. ஜூலை 31-க்கு பிறகு நிலைமையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம். ***** வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு. “ வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருவது அவசியம்" “ வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது"-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ***** மே 1ம் தேதி முதல் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துற...