Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes.



நீதிமன்றத்திலிருந்து அறிக்கை வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும். உச்சநீதிமன்ற உத்தரவில் என்ன சொல்லப்பட்டதோ அதே நடைமுறைகள் பின்பற்றப்படும்  என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் 4 மாதங்களுக்கு மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி.

ஜூலை 31-க்கு பிறகு நிலைமையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம்.

*****

வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு.

வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருவது அவசியம்"

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது"-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

*****

மே 1ம் தேதி முதல் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு.

*****

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன்:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் - கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை என தகவல்.

*****

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியது.

cowin.gov.in மற்றும் ஆரோக்ய சேது செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு 4 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் crash ஆனது.

*****

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 738 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யபட்டது. மாநகர பகுதியில் 396 பேருக்கும் புற நகர பகுதியில் 342 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

*****

பாரம்பரிய கூத்தாண்டவர் திருவிழாவை கொரோனாவின் ருத்ர தாண்டவத்தால் வேலூரில் எளிய முறையில் கொண்டாடிய திருநங்கைகள்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூவாக்கம் கிராமத்தில் வருடம் ஒருமுறை நடைபெறுவதுண்டு இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவின் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதன் காரணமாக சுமார் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இணைந்து முகக் கவசங்கள் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கூத்தாண்டவர் கோயிலில் வருடம் ஒருமுறை நடைபெறும் அவ்விழாவில் என்னென்ன நடக்குமோ அதேபோல்  கும்மி பாட்டு, கற்பூரம் ஏற்றுதல், தாலியறுத்து அழுதல், போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி எளிமையாக விழாவை கொண்டாடினர்.

*****

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ 100 குறைப்பு- சீரம் நிறுவனம்.

தடுப்பூசி விலையை குறைக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்த நிலையில் சீரம் நிறுவனம் விலை குறைப்பு.

மாநில அரசுகளுக்கான தடுப்பூசி ரூ 400-லிருந்து ரூ 300 க்கு விற்பனை.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது என சீரம் அறிவிப்பு.

விலையை குறைக்குமாறு மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் விலை குறைப்பு.

*****

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இடமாற்றம்:

ரெம்டெசிவிர் மருந்து நாளை முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்கப்பட்டு வந்த நிலையில் இடமாற்றம்.

*****

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா உறுதி; 98 பேர் உயிரிழப்பு.

*****

அனைத்து கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை.

பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கல்லூரிக்கு வர நிர்பந்தம் செய்யக்கூடாது.

வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM