கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM 

ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு.



தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

https://ucc.uhcitp.in/form/drugs

https://tnmsc.tn.gov.in/

*****

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த இன்றுமுதல் (18ஆம் தேதி) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காலை 10 மணி முதல் பொதுமக்கள் சரக்கை எல்லைக்கு வெளியே செல்ல இப்பதிவு அவசியம் 

*****

கொரோனா மருத்துவ வழிக்காட்டுதல்களில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கியது மத்திய அரசு;

பிளாஸ்மா சிகிச்சை முறை எதிர்பார்த்த பலனை அளிக்காததால் மருத்துவ வழிக்காட்டுதலில் இருந்து நீக்கப்பட்டதாக விளக்கம்.

*****

ஆந்திராவில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம்..! ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட். - ஜெகன்மோகன், முதல்வர்.

*****

எரிபொருள் விலை உயர்வுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும்!

- மத்திய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

கோவிட்-19 பெருந்தொற்று நோயின் துயரமான காலக்கட்டத்தில் எரிபொருள் விலையை அநியாயமாக உயர்த்துவதற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

*****

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

-கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை

-காணொலி மூலம் பங்கேற்றார் முதலமைச்சர்

ஸ்டாலின்

*****

மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கியது மத்திய அரசு: கரோனா தடுப்புக்கு 50 சதவீதம் செலவிட அனுமதி.

*****

தமிழகத்தில் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவியை சேகர் ரெட்டி வழங்கினார்.

*****

தமிழகத்தில் முகக்கவசம் அணியாததற்காக கடந்த ஏப்ரல் 8-ஆம்தேதி முதல் இதுவரை சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன. தனிநபர் இடைவெளி பின்பற்றாததற்காக சுமார் 37ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

*****

தடுப்பூசிகள் இனி தமிழகத்தில் தயாரிப்போம் - ஸ்டாலின்

ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களை தொடங்க தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

*****

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் 74 பேருக்கு கொரோனா.

ஆசிரியர் மூலமாக குழந்தைகளுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்று அச்சம்.

*****

கொரோனா தொற்று 2 வது அலையில் நாடு முழுவதும் 269 மருத்துவர்கள் மரணம்.



தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவர்கள் மரணம்.

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தகவல்.

*****

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

*****

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

*****

கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது குறித்து 27 தொண்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.

*****

கொரோனவால் உயிரிழக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ .50,000 வழங்கப்படும்.

வீட்டில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

*****

கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் 2000 ரூபாய் அபராதம்.

கொரோனா பாதித்து வெளியே நடமாடுபவர் பற்றி 044 - 25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு.

*****

"திண்டிவனத்தில் விதி மீறிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்!" -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM