Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM | 27.08.2021

Today Headline News இன்றைய முக்கிய செய்திகள்  | NPM | 27.08.2021

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes.

திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்று காலை ( பக்தர்களின்றி ) சிறப்பாக நடைபெற்றது.



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு (10 நாட்கள் ) அனுமதி மறுப்பு.

நாளை  முதல் செப்.5 வரை 10 நாட்கள் தரிசனத்திற்கு தடை .

கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக  திருவிழா நாட்களில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

*****

சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.93.52 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

*****

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

*****

காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் - காபூல் குண்டுவெடிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென்.

*****

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு:

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2020 நவம்பர், டிசம்பர் 2021 ஏப்ரல், மே மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

*****

தமிழ்நாட்டில் இதுவரை இல்லத அளவாக நேற்றுதான் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

*****

பிரபல 'யாகூ' நிறுவனம், இந்தியாவில், அதன் செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

'யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மேக்கர்ஸ் இந்தியா' ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

யாகூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் பெயரில் நடிகர், நடிகைகள் தேர்வுக்கு அழைப்பதாக மோசடி. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

*****

டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி மூலம் எதிர்கட்சிகளை திமுக ஒன்றிணைக்கிறது.

*****

புதுச்சேரியில் செப்.23,24-ம் தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

*****

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட நீதிமன்றம்.

*****

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் மீண்டும் பேருந்து சேவை துவங்கும்- புதுவை அரசு.

*****

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 14,600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று வினாடிக்கு 13,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 14,600 கன அடியாக உயர்ந்துள்ளது.

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 9,600 கன அடி நீரும் கபினியில் இருந்து 5,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

*****

Comments

Popular posts from this blog

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM