தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு | NPM
Local body elections announced for nine districts in Tamil Nadu | NPM
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி
தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
நடத்தாமல் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர்,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் இரண்டு
கட்டங்களாக நடைபெறுகிறது!
Youtube Video
வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு,
நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர்
பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 (06.10.2021)
மற்றும் 9ம் (09.10.2021) தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு காலை 7 மணி
முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி (12.10.2021)
நடைபெறும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான
வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது
முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்
7,921 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் 6,652 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும்.
தேர்தல் நடத்தை விதிகள்
அமல்:
தேர்தல் நடைபெற உள்ள 9
மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
9 மாவட்டங்களிலும் அக்.16ஆம்
தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை
விரைவாக நடத்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
9 மாவட்டங்களுக்கு தனித்தனி
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர் என மாநில தேர்தல் ஆணையர்
பழனிகுமார் அறிவிப்பு.
கொரோனா விதிமுறைகள் பின்பற்றி
தேர்தல் நடத்தப்படும்.
செப்டம்பர் 15ம் தேதி வேட்புமனு
தாக்கல் தொடங்கப்படுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர்
12ல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 16ல் நிறைவு பெறுகிறது.
காலை 7 மணி முதல் மாலை
6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 - 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்
வாக்களிக்கலாம்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை
செப்டம்பர் 23ல் நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப்பெற செப்டம்பர் 25 கடைசி நாள்
ஆகும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில்
4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார்
அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு
செய்யப்படும்.
*****
Comments
Post a Comment