Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM

News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News. 

78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


"நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்."

மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.

மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன்.

தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு.

விடுதலை எளிதாக கிடைக்கவில்லை; 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது.

சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

*******

முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.

சிறந்த மாநகராட்சி - கோவை

சிறந்த நகராட்சி - திருவாரூர்

சிறந்த மண்டலம் - சென்னை மாநகராட்சி 14வது மண்டலம்

சிறந்த பேரூராட்சி - சூலூர் (கோவை மாவட்டம்)

*******

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000ல் இருந்து ரூ.21,000ஆக உயர்வு.

தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கட்டபொம்மன், வ.உ.சி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்வு.

*******

விஞ்ஞானி வீரமுத்துவேலுவிற்கு அப்துல் கலாம் விருது.

சந்திரயான் 3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது.

5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வயநாடு நிலச்சரிவின்போது, துணிச்சலாக மக்களுக்கு சேவையாற்றிய கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவிற்கு 'கல்பனா சாவ்லா' விருது.

ரூ.5 லட்சத்திற்கான காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது.

₹10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

*******

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து தொடர்ந்து ஹாரன் அடித்து வந்ததால் காரை நிறுத்தி இயக்குனர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வைரலான நிலையில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக 20க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தலா ரூபாய் 10,000 அபராதம்.

தனியார் பேருந்துகளில் தற்போது பயன்படுத்தப்படுவது ஏர்ஹாரன் கிடையாது. எலக்ட்ரிக் ஹாரன் தான் என தனியார் பேருந்து சங்கம் விளக்கம். பயணிகளுடன் வந்த பேருந்தை இயக்குனர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு என புகார்.

சேரன் காவல்துறைக்கோ அல்லது போக்குவரத்துதுறைக்கோ புகார் அளித்திருக்க வேண்டும். தானாக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்.

இயக்குனர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் புகார்.

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM