Tamil News Live 17 January 2025: தமிழ்நாட்டில் சென்னையில் இரவு நேர கார் பந்தயம் - முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி | NPM

சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் அஜித் பாராட்டு.

News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News.

இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சுதான்ஷு கோடக் நியமனம்.

இங்கிலாந்து டி20 தொடர், சாம்பியன்ஸ் டிராஃபி என அடுத்தடுத்த தொடர்கள் வரிசை கட்டும் நிலையில் நடவடிக்கை.
---

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 12 பேர் உயிரிழப்பு!

16 பேர் காணாமல் போயுள்ளனர்; மேலும் 18 பேர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என இந்திய வெளியுறவுத் துறை அதிர்ச்சித் தகவல்.

---

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் போலி டிக்கெட்டுகளை கொடுத்து மோசடி செய்த 3 பேர் கைது

ரூ.300 தரிசன டிக்கெட்டை போட்டோஷாப் மூலம் தயாரித்து, அதிக தொகைக்கு விற்று மோசடி

டிக்கெட் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமிபதி என்பவருடன் கூட்டு சேர்ந்து மோசடி

5 பேர் மோசடியில் ஈடுபட்ட நிலையில் 3 பேர் கைது, 2 பேர் தலைமறைவு

11 போலி டிக்கெட்டுகளை 19 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர்களிடம் விற்பனை செய்தது விசாரணையில் கண்டுபிடிப்பு.

---

சென்னை : கிண்டி ரயில் நிலையத்தில், பொறியாளரிடம் செயின்பறிப்பில்  ஈடுபட்ட இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது.

---

கர்நாடகாவில் மீண்டும் ஒரு வங்கி கொள்ளை சம்பவம்

நேற்று பீதர் மாவட்டத்தில் கொள்ளை நடந்த நிலையில் இன்று மங்களூர் அருகே மற்றொரு கொள்ளை சம்பவம்


வங்கிக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற 5 பேர் கொண்ட கும்பல்

வங்கியில் இருந்த சுமார் ஒரு கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல்

5 பேரும் முகமூடி அணிந்து இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தகவல்

வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி கொள்ளை சம்பவம்

ஒருவர் காரை ஆன் செய்து தயாராக வைத்திருக்க, மற்ற 4 பேரும் உள்ளே புகுந்து கொள்ளையடித்துவிட்டு தப்பியோட்டம்.

---

சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்த போது இயந்திரக் கோளாறு

நடுவானில் விமானம் பறந்த போது, விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், 162 பேர் உயிர்தப்பினர்.

---

நெல்லை மாவட்டம் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு

குடும்பத்தோடு ஆற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்

5 பேர் நீரில் மூழ்கிய நிலையில், 3 பேர் உயிருடன் மீட்பு

13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு சிறுமியை தேடும் பணி தீவிரம்

---

வீட்டின் சமையலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்,

உடல் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்து இருக்கலாம் என தகவல் வீட்டின் சமையலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்து இருக்கலாம் என தகவல்.

உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார்.

---

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM