Tamil News Live 30 January 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | NPM

News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

*****

செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அறிவிப்பு.

பிப்.22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

*****

இன்று அனைத்துக்கட்சி கூட்டம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அவையை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

*****

சென்னை: மணலி பள்ளிபாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற முதியவர் மகாராஜா (60) கைது!

மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*****

நீலகிரி அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கள்ளத் துப்பாக்கிகளை விநியோகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

*****

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதிய பயணிகள் விமானம்.

சிறிய ரக பயணிகள் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து.

ரீகன் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்து.

விபத்திற்குள்ளாகி பொடொமாக் ஆற்றில் விழுந்த விமானம்.

*****

மதுரை: திருமங்கலத்தில் 3 மணி நேரமாக தொடரும் சாலை மறியல்.

பள்ளி, ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத நிலையில் சுரங்கப்பாதை வசதி  கோரி திருமங்கலம் - ராஜபாளையம் சாலையில் ஆலம்பட்டி கிராம மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

*****

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ₹1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வர் - பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

கைதான திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது ஆகிய 4 பேரும் சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு செல்லும் வழியில் சிக்கியுள்ளனர். பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் திட்டம்.

*****

இன்று சவரனுக்கு ₹120 உயர்ந்த தங்கம் விலை.

ஒரு சவரன் தங்கம் விலை - ₹60,880, 

ஒரு கிராம் - ₹7610. 

வெள்ளி விலை கிராம் - ₹106.

*****

பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ₨100.90க்கும்,

டீசல் ₨92.48க்கும், சிஎன்ஜி கிலோ ₨90.50க்கும் விற்பனை

*****

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா உடல்நலக்குறைவால் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

*****

"குடியிருப்பு பகுதிகள், அமைதி மண்டலம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது"

தமிழகத்தில் ஒலி மாசினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்டோரை நியமித்தது.

*****

இன்ஸ்ட்ராகிராமில் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய இந்தி சீரியல் நடிகை ஜன்னத் ஜூபைர்.  23 வயதில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியானார்.

*****

இனி OLA, UBER உள்ளிட்ட செயலிகளுடன் இணைந்து வாகனங்களை இயக்கப் போவதில்லை எனவும் ஆட்டோவுக்கான புதிய மீட்டர் கட்டணத்தையும் அறிவித்துள்ளது ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு.

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM