Tamil News Live 21 February 2025 : எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை ! தர்மேந்திர பிரதான்-ஸ்டாலின்

News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News.

எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை!

எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்.

"வரியை நிறுத்த ஒரு நொடி போதும்'' கல்வி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது; தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்.

*****

தேசிய கல்விக் கொள்கை மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தேசிய கல்விக் கொள்கை மூலம் நம் பிள்ளைகளின் படிப்பை தடுக்க முயற்சி செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் அல்லவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

*****

"தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். நீங்கள் வந்துதான் வளர்க்க வேண்டும் என்று 'தமிழ்' உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை"

"கல்வியில் அரசியல் செய்வது நாங்களா? நீங்களா?. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது அரசியல் இல்லையா?

தமிழ்நாட்டில் நீங்கள் வாங்கும் வரியை தர முடியாது என்று கூற, எங்களுக்கு ஒரு நொடி ஆகாது.

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம். தமிழர்களின் தனித்துவ போராட்டக் குணத்தை பார்க்க ஆசைப்படாதீர்கள்

- கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

*****

தமிழக அரசு இழப்பது ரூ.2500 கோடி அல்ல ரூ.5000 கோடி.

PM SHRI திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் ரூ.5000 கோடியை இழக்க நேரிடும்..

PM SHRI திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் ரூ.2500 கோடியை தமிழகம் இழக்கவில்லை, ரூ.5000 கோடியை இழக்கிறது

PM SHRI திட்டம் என்பது 8ம் வகுப்பு வரை தாய் மொழி வழியில் கல்வி கற்பதை உறுதிப்படுத்துகிறது-மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

*****

"தமிழ்நாட்டுக்கு நிதியை விடுக்க மறுப்பது ஒன்றிய அரசு இழைக்கும் துரோகம்"

மும்மொழிக்கொள்கை தமிழ்நாட்டுக்கு தேவையில்லாதது: 

நிதியை விடுக்க மறுப்பது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம்.

மத்திய அரசு மீது மக்கள் வேதனையும், வெறுப்பும் அடைந்துள்ளனர்.

மும்மொழி கொள்கையை வற்புறுத்தி திணிக்க முயலும் மத்திய  அரசின் முயற்சியால் தமிழ்நாட்டு மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

*****

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது!

எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர்.

சமக்ர சிக்க்ஷா போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது-சபாநாயகர் அப்பாவு.

*****

ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசின் போக்கை கண்டித்து தாம்பரத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ . 2,152 கோடியை மாணவர்கள் நலன் கருதி விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

*****

கல்வியை அரசியலாக்காதீர் - தர்மேந்திர பிரதான்.


தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது.

நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம்.

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM