Curfew extended for another week with some relaxation in Tamil Nadu | NPM
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு. Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை , 6:00 மணி வரை , சில தளர்வுகள் விவரம் : தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள் , டாக்ஸிகள் , ஆட்டோக்கள் இ - பதிவுடன் செயல்பட அனுமதி . தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி . கண் கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது . பள்ளி , கல்லூரிகள் , பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி . தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி . வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி . ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி . இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட ...