Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM
இன்றைய முக்கிய செய்திகள்: Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. கர்நாடக முதல்வராக மூத்த அமைச்சர் பசவராஜ் பொம்மை தேர்வு. முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை மகன் பசவராஜ் பொம்மை. எடியூரப்பாவுக்கு நெருக்கமான பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராக இருந்தார். ***** கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது. ***** திருச்சி: அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் பயணம் செய்கிறோம் எனவும் கூறினார் ***** டெல்லி: தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பான கருத்துகளை அறிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது ***** மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் குற...